விபத்து நடந்த நேரத்தில் அவர் மதுபோதையில் இருந்ததாக சிலர் சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துக்கள் வெளியிட்டன. ஆனால் விசாரணையில் அவர் மதுபோதையில் இல்லை என்பது தெரியவந்துள்ளது.
முன்னாள் சபாநாயகரும், பாராளுமன்ற உறுப்பினருமான அசோக ரன்வல பயணித்த ஜீப் வண்டி, கார் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது.
மோட்டார் சைக்கிள் ஒன்றும் இவ்விபத்துடன் தொடர்புபட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் ஜீப் வண்டியில் பயணித்த பாராளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வல சிகிச்சைக்காக ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நேற்று (11) இரவு சப்புகஸ்கந்த, தெனிமல்ல பிதேசத்தில் இடம்பெற்ற இவ்விபத்தில் காரில் பயணித்த 25 வயது பெண், அவரது 6 மாத குழந்தை, 55 வயது மற்றுமொரு பெண் ஆகியோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குழந்தை மேலதிக சிகிச்சைக்காக லேடிடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
