கிறிஸ்மஸ் தினத்தன்று அதிவேக நெடுஞ்சாலைகள் ஊடாக 54 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.
நேற்று (25) ஒரு இலட்சத்து 46 ஆயிரம் வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணித்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, கிறிஸ்மஸ் தினத்திற்கு முந்தைய நாள் அதிவேக நெடுஞ்சாலைகளின் வருமானம் 25 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது.
அதன்படி, முன்தினம் (24) 61 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடக அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
சாதாரண ஒரு நாளில் அதிவேக நெடுஞ்சாலைகள் ஊடாகக் கிடைக்கும் வருமானம் 45 மில்லியன் ரூபாவாகும்.
அத்துடன் சாதாரண நாளொன்றில் அதிவேக நெடுஞ்சாலைகளில் ஒரு இலட்சத்து 45 ஆயிரம் வாகனங்கள் பயணிப்பதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
