நேற்று (28) டிட்வா சூறாவளி பேரழிவால் பாதிக்கப்பட்ட கொழும்பு 10 அல் ஹிஜ்ரா முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்களுக்கு உதவி வழங்கும் திட்டம் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
இந்த அர்த்தமுள்ள முயற்சியை இலங்கை பைத்துல் மால் நிதியம் பாடசாலை வளாகத்தில் ஏற்பாடு செய்தது.
பாடசாலை அதிபர், பைத்துல் மால் பிரதிநிதிகள், SDEC உறுப்பினர்கள், PPA உறுப்பினர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இந்த Back to School திட்டத்தின் மூலம், எங்கள் மாணவர்கள் நம்பிக்கையுடனும் பாடசாலைக்குத் திரும்ப உதவுவதற்கு அத்தியாவசிய ஆதரவு வழங்கப்பட்டது.
இதைச் சாத்தியமாக்கிய அனைத்து தாராள நன்கொடையாளர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கும் மனமார்ந்த நன்றிகளை பாடசாலை நிர்வாக தெரிவித்துள்ளது.
இந்த சிறந்த பணியை எல்லாம் வல்ல அல்லாஹ் ஏற்று இதற்கான பிரதிபலனை இம்மையிலும் மறுமையிலும் வழங்குவானாக என்றும் பாடசாலை நிர்வாகம் பிரார்த்தைனை செய்கிறது.

