இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன் சுகாதாரம் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இடையிலான கலந்துரையாடல் இன்று (19) காலை இந்தியாவின் புதுடெல்லியில் உள்ள சுகாதார அமைச்சில் நடைபெற்றது.
உலக சுகாதார அமைப்பின் (WHO) பாரம்பரிய மருத்துவம் குறித்த இரண்டாவது உலகளாவிய உச்சி மாநாட்டிற்கு இணையாக இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
எதிர்காலத்திலும் சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளை மேம்படுத்துவதற்காக இந்தியா இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று அனுப்பிரியா படேல் தெரிவித்தார்.
மேலும், இலங்கை சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாட்டை முன்னெடுத்துச் செல்வது குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.

