‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் பதிவு செய்து, தற்போது கொடுப்பனவுகளைப் பெற்று வரும் மற்றும் இதுவரை கொடுப்பனவு கிடைக்காத அனைவரும் தமது தகவல்களைப் புதுப்பிப்பதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் 2025 டிசம்பர் 31 ஆம் திகதியுடன் நிறைவடைவதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
2002 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க நலன்புரி நன்மைகள் சட்டத்தின்படி, நலன்புரி கொடுப்பனவுகளைப் பெறத் தகுதியுடையவர்களின் பெயர் பட்டியலை ஆண்டுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டியது அவசியமாகும்.
குறிக்கப்பட்ட காலப்பகுதிக்குள் தமது தகவல்களைப் புதுப்பிக்கத் தவறும் பயனாளிகளுக்கு, அஸ்வெசும கொடுப்பனவுகள் நிறுத்தப்படும் என அந்த அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், டிசம்பர் 31 ஆம் திகதிக்குப் பிறகு தகவல்களைப் புதுப்பிப்பதற்கான கால அவகாசம் மீண்டும் நீடிக்கப்பட மாட்டாது என்றும் நலன்புரி நன்மைகள் சபை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
