திட்வா புயல் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு துருக்கி அரசு உலர் உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை நிவாரணமாக வழங்கியுள்ளது.
இலங்கைக்கான துருக்கி தூதுவர் இந்த நிவாரணப் பொருட்களை கையளித்தார்.
சுமார் ஒரு இலட்சம் டொலர் பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய உபகரணங்கள் இதில் உள்ளடங்குகின்றன.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் ஓய்வுப் பெற்ற மேஜர் ஜெனரல் சம்பத் கொட்வேகொடவிடம் நிவாரணப் பொருட்கள் கையளிக்கப்பட்டன.
