பாபர் மசூதி இடிப்பு தினம் இன்று சனிக்கிழமை அனுசரிக்கப்படுகிறது.
டிசம்பர் 6, 1992 ம் ஆண்டு உத்தரபிரதேசத்தில் உள்ள அயோத்தியில், 16-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பாபர் மசூதி இந்துத்துவா கும்பலால் இடித்துத் தள்ளப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற கலவரத்தில், 2,000 பேர் கொல்லப்பட்டனர். ஆண்டுதோறும் பாபர் மசூதி தகர்க்கப்பட்ட டிசம்பர் 6-ம் தேதியை இஸ்லாமிய அமைப்புகள் துக்க தினமாகவும், கருப்பு நாளாகவும் அனுசரித்து வருகின்றனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் 500 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த பழமையான பாபர் மசூதியை 1992-ம் ஆண்டு இதே டிசம்பர் 6-ந் தேதி இந்துத்துவா அமைப்பினர் இடித்து தரை மட்டமாக்கினர்.
அண்ணல் அம்பேத்கர் நினைவு நாளான டிசம்பர் 6-ந் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இதனால் நாடு முழுவதும் மிகப் பெரும் மத மோதல்கள் வெடித்து ரத்த ஆறு ஓடியது.
1528: முகலாயப் பேரரசர் பாபரின் தளபதி மிர் பாகி அயோத்தியில் பாபர் மசூதியைக் கட்டினார்.
1853: இந்து கோவிலை இடித்துவிட்டு மசூதி கட்டப்பட்டதாக குற்றம் சாட்டி வன்முறைகள் நிகழ்ந்தன.
