வட மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழை.

Date:

இன்றையதினம் (02) நாட்டின் வட மற்றும் தென் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

கிழக்கு, ஊவா, வடமத்திய மாகாணங்களின் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், மத்திய, சப்ரகமுவ, ஊவா, வடமேல், தென் மாகாணங்களிலும் அம்பாறை மாவட்டத்திலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழையின் போதான பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

திருகோணமலையிலிருந்து காங்கேசந்துறை ஊடாக மன்னார் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் களுத்துறையிலிருந்து காலி மற்றும் மாத்தறை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்குத் திசையிலிருந்து வீசக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 25-35 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் சாதாரண முதல் மிதமான அலை வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற் பகுதிகளில் அவ்வப்போது பலத்த காற்று வீசுவதுடன் அக்கடற் பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

இலங்கையின் அவசர நிதி கோரிக்கைக்கு சர்வதேச நாணய நிதியம் முன்னுரிமை!

டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து நாடு எதிர்கொள்ளும் சவால்களைச் சமாளிக்க,...

சீரற்ற வானிலையால் சுமார் 1000 பாடசாலைகள் பாதிப்பு!

சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் 9 மாகாணங்களிலும் சுமார் ஆயிரம் பாடசாலைகள்...

காசாவில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் தினமும் மீறுகிறது: துருக்கி, எகிப்து குற்றச்சாட்டு.

காசாவில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தபோதும், அங்கே போர் மேகங்கள்...

பேரிடர் காரணமாக மன அழுத்தத்தை அனுபவித்தால் 1926 என்ற இலக்கத்‍தை அழைக்கவும்!

பேரிடர் காரணமாக மன அழுத்தத்தை அனுபவித்தால், தேசிய மனநல நிறுவனத்தின் 1926...