இலங்கையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அவசர நிவாரண திட்டத்தை ஆரம்பித்து வைக்கிறது கத்தார் செரிட்டி.

Date:

அபிவிருத்திக்கான கத்தார் நிதியத்தின் நிதிப் பங்களிப்புடன் இலங்கைக்கான கத்தார் அரசின் தூதரகத்துடன் இணைந்து, டிட்வா புயல் மற்றும் பெரு வெள்ளத்தால் நாட்டின் பல பகுதிகளிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ அவசர நிவாரண முயற்சியை தொடங்கியுள்ளது கத்தார் செரிட்டி.

இடம்பெயர்ந்த 1,800 குடும்பங்களுக்கு அவசியமான உணவுப் பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதிகளை வழங்குதல், மேலும் இடர் முகாமைத்துவ மையத்துடன் இணைந்து இடர் எதிர்வினைக்கான தேசிய திறனை வலுப்படுத்தும் பொருட்டு தேடுதல் மற்றும் மீட்பு உபகரணங்களை வழங்குதல் போன்ற திட்டங்களை உள்ளடக்கிய இம்முயற்சியின் மொத்த மதிப்பு 55 மில்லியன் ரூபா ஆகும்.

டிசம்பர் 6, 2025 அன்று மாபோலாவில் நடைபெற்ற தொடக்க விழாவில் பிரதேச சமூக தலைவர்களுடன் கத்தார் அரசின் இலங்கைக்கான தூதரகத்தின் பிரதித் தூதுவர் திரு. அலி பின் சலீம் அல் நுஐமி மற்றும் கத்தார் செரிட்டியின் இலங்கைக்கான பனிப்பாளர் திரு. முஹ்மூத் அபுகலீஃபா ஆகியோர் கலந்து கொண்டனர்.

கத்தார் செரிட்டியின் இலங்கைக்கான பனிப்பாளர் முஹ்மூத் அபுகலீஃபா நிகழ்வில் உரையாற்றிய போது,

‘இந்த அவசரகால செயற்பாடுகள், உலகம் முழுவதும் பாதிக்கப்பட்ட குடும்பங்களை இனம், மதம் பாரபட்சமின்றி ஆதரிப்பது என்ற கத்தார் செரிட்டியின் பணி நோக்கத்தை பிரதிபலிக்கின்றன.

மேலும் மனித நேய ஒருமைப்பாட்டுக்கான கத்தாரின் திடமான நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன.’ என்று தெரிவித்தார்.

இலங்கையில் மனித நேய செயற்பாடுகளில் முன்னணியில் பங்காற்றி வருகின்ற கத்தார் செரிட்டி இதற்கு முன்பும் ஆயிரக்கணக்கான பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அவசர உதவி, விவசாய ஆதரவு, மருத்துவ உதவி மற்றும் சமூக நிவாரணங்களை வழங்கியிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு குவைத் தலைவர்கள் இரங்கல்.

குவைத் நாட்டின் தலைவர்கள் டிட்வா புயல்தாக்கத்தினால் துயரத்தில் வாடும் இலங்கை மக்களுக்கு...

Re building Sri lanka திட்டத்திற்கு இதுவரை ரூ. 1893 மில்லியன் நிதி உதவி

டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவிலிருந்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள Re...

35 தொன் மனிதாபிமான உதவிப் பொருட்களை இலங்கைக்கு அனுப்பியுள்ள ரஷ்யா!

ரஷ்யா மனிதாபிமான உதவிப் பொருட்களை விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பியுள்ளதாக, மொஸ்கோவிற்கான...

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு பல தனியார் நிறுவனங்களிடமிருந்து நன்கொடைகள்

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் ‘Rebuilding Sri...