தித்வா புயல் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாகம் சுமார் 1.5 மில்லியன் ரூபா நிதியும் ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான ஒரு தொகுதி உலர் உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கொழும்பு பெரிய பள்ளிவாசலில் வைத்து கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதியமைச்சர் முனீர் முழப்பர் கலந்து கொண்டார்.
கொழும்பு பெரிய பள்ளிவாசல் தலைவர் தாஹிர் ரஸீன் தலைமையிலான நம்பிக்கையாளர் சபையினர் பிரதியமைச்சருடன் இணைந்து இவற்றை பெற்றா பள்ளிவாசல்கள் சம்மேளனத் தலைவர் அஷ்ஷெய்க் மெளலவி L M லமீர் ஹாபிஸ் உள்ளிட்ட சம்மேளன அங்கத்தவர்களும் வழங்கி வைத்தனர்.
இந்நிவாரனப் பொருட்கள் குறிப்பாக அனர்த்தத்தினால் மிகவும் பாதிக்கப்பட்ட வெல்லம்பிட்டி, கொலன்னாவ மக்களுக்கு பெற்றா பள்ளிவாசல்கள் சம்மேளனம் ஊடாக வழங்கப்படவுள்ளது.
தலைமையுரையை கொழும்பு பெரிய பள்ளிவாசல் தலைவர் தாஹிர் ரஸீன் நிகழ்த்தியதுடன் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பிரதி பணிப்பாளர் அலா அஹமட், சமய மற்றும் கலாசார விவகாரங்களுக்கான பிரதியமைச்சர் முனீர் முழப்பர் ஆகியோர் உரையாற்றினர்.
இந்நிகழ்வில் கொழும்பு பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர்கள், உலமாக்கள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள ஏனைய அதிகாரிகள், முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
