லைன் அறைகளுக்கு பதிலாக தனி வீடுகளை வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் எல்கடுவ பெருந்தோட்ட நிறுவனத்திற்கு சொந்தமன மாத்தளை நாலந்த தோட்டத்தைச் சேர்ந்த குடும்பங்களுக்கு புதிய வீடுகள் நிர்மாணிக்கப்பட்டன.
இந்திய நிதியுதவியின் கீழ் இந்த வீடுகளின் நிர்மாணம் இடம்பெற்றது. ஒரு வீட்டிற்கென 28 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளது. திட்டத்தின் கீழ் மாத்தளை மாவட்டத்தில் 270 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.
இந்நிலையில் நிறைவடைந்த 24 வீடுகள் பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான நிகழ்வு பிரதியமைச்சர் கமகெதர திஸாநாயக்க தலைமையில் இடம்பெற்றது.
