சிலாபம் வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு நாளை திறக்கப்படும்

Date:

சிலாபம் மாவட்ட பொது வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவை (OPD) நாளை (03) முதல் மீண்டும் திறக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

அண்மையில் ஏற்பட்ட பேரிடர் சூழ்நிலை காரணமாக வைத்தியசாலையில் OPD சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

நேற்றைய தினம் வைத்தியசாலைக்கு மின்சாரம் மீண்டும் வழங்கப்பட்டு, இன்று (02) நீர் விநியோகமும் மீண்டும் வழங்கப்பட்டதாக சிலாபம் மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் தெரிவித்தார்.

மேலும், பொது சேவைகள் விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்பும் வகையில் சேதமடைந்த வைத்தியசாலையின் மற்ற அனைத்து பிரிவுகளும் படிப்படியாக விரைவாக மீட்டெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...