அனர்த்தத்தால் சேதமடைந்த வாகனங்களின் உரிமையாளர்களுக்கு உதவி: வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்.

Date:

நாட்டில் டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரனர்த்தத்தால் அழிவடைந்த மற்றும் சேதமடைந்த வாகனங்கள் தொடர்பான தகவல்கள் தற்போது சேகரிக்கப்பட்டு வருவதாக மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் (DMT) தெரிவித்துள்ளது.

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவிக்கையில்,

சேதமடைந்த வாகனங்கள் தொடர்பான தகவல்களை திரட்ட 15 ஆம் திகதிக்குப் பின்னர் மாவட்டங்கள் தோறும் விசேட  நடமாடும் சேவை நடத்தப்படும்.

அதன்படி, தகவல்கள் சேகரிக்கப்பட்டு அதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். சேதமடைந்த வாகனங்கள் பயன்பாட்டிற்கு உகந்ததா என்பதை தீர்மானிக்க மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் பரிசோதனைகளை மேற்கொள்ளும்.

பேரனர்த்தத்தால் சிலரது வாகனங்கள் மற்றும் ஆவணங்கள் இரண்டும் அழிவடைந்துள்ளதால், வாகனம் தொடர்பான தவகல்களை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.

அதற்கிணங்க, பாதிக்கப்பட்ட வாகன உரிமையாளர்கள் வாகனங்கள் தொடர்பாக அந்தந்த கிராம சேவக பிரிவின் கிராம சேவகரிடம் தெரிவிக்க வேண்டும். அதன் பின்னர் அவர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு (OIC) அறிவிப்பார். அதனை தொடர்ந்து முறைப்பாடு அளிக்க வேண்டும்.

விசாரணைகளை ஆரம்பிக்கவும், நிலைமையை திறம்பட கையாளவும் பல்வேறு துறைகளிலிருந்து துல்லியமான தரவுகளைப் பெற்றுக் கொள்வது முக்கியமானதொரு விடயமாகும்.

தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பல்வேறு பிரிவுகளுக்கு அதிக அளவிலான தொலைபேசி அழைப்புகள் வருவதனால்  விசேடப்  பிரிவை அமைத்து இந்தப் பிரச்சினையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வாகனங்கள் தொடர்பான தகவல்களை வழங்க 070 71 88 866 என்ற புதிய வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வட்ஸ்அப் இலக்கம் ஊடாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்திற்கு தேவையான தகவல்களை வழங்கலாம்.

அத்தோடு, தனிநபர்கள் தங்கள் வாகனங்கள் அல்லது ஆவணங்கள் தொடர்பான ஏதேனும் ஆதாரங்களை வைத்திருந்தால், அத்தகைய ஆதாரங்களை பாதுகாக்க வேண்டும், ஏனெனில் அது எதிர்கால நடைமுறைகளுக்கு உதவும் என குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சையின் இரண்டாம் கட்டம் ஜனவரியில்..!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் நடத்தப்படாது எஞ்சியுள்ள பாடங்களுக்கான பரீட்சைகளை...

பாகிஸ்தான் கடல்சார் விவகாரங்களுக்கான அமைச்சர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம்

பாகிஸ்தான் கடற்றொழில் மற்றும் (பெட்ரல் ) உள்ஆட்சி அமைச்சர் மொஹமட் ஜுனைத்...

பலத்த மின்னல் தாக்கம்: வளிமண்டலவியல் திணைக்களம் செம்மஞ்சள் எச்சரிக்கை.

மேற்கு, சபரகமுவ, தெற்கு மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் கடுமையான மின்னலுக்கான செம்மஞ்சள்...

ஆடை விற்பனை நிலையத்தில் பெண்கள் ஆடை மாற்றும் அறையில் சிசிரிவி கமரா: உரிமையாளர் கைது!

மஹரகம - தலவத்துகொட பிரதேசத்தில் உள்ள ஆடை விற்பனை நிலையம் ஒன்றில்...