ஜெட்டாவுக்கான கொன்சல் ஜெனரலாக முஸ்லிம் அல்லாத ஒருவரின் நியமனம் தற்காலிகமானதே: பிரதி அமைச்சர் முனீர் முலப்பர் விளக்கம்!

Date:

வரலாற்றில் முதல் முறையாக, முஸ்லிம் அல்லாத ஒருவரை சவூதி அரேபியாவின் ஜெட்டா கொன்சல் ஜெனரலாக இலங்கை வெளிவிவகார அமைச்சு நியமித்துள்ளமை தொடர்பில் முஸ்லிம் சமூகத்தில் பல்வேறு கருத்துகளும் விவாதங்களும் எழுந்துள்ளன.

முன்னதாக, ஹஜ் மற்றும் உம்ரா யாத்திரைகளுடன் தொடர்புடைய நிர்வாக நடவடிக்கைகளை திறம்பட மேற்கொள்ளும் நோக்கிலும் புனித பிரதேசங்களில் அக்கடமைகள் தொடர்பான விடயங்களை நேரடியாக மேற்பார்வை செய்யும் நோக்கிலும் இஸ்லாம் மதம் மற்றும் அதன் நடைமுறைகள் குறித்த அறிவைக் கொண்ட ஒரு முஸ்லிம் தூதரை ஜெட்டா கொன்சல் ஜெனரல் ஒருவரே நியமிக்கப்பட்டு வந்தார்.

அந்தப் பொறுப்பில் இருந்து சேவை புரிந்த முன்னாள் கொன்சல் ஜெனரல் ஷேக் நயீமுதீன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தப் பதவியின் கீழ், மக்கா மற்றும் மதீனா ஆகிய புனித நகரங்களுக்கு அதிகாரப்பூர்வ வருகைகள் உள்ளிட்ட முக்கிய பணிகள் இடம்பெறுகின்றன.

இந்த விவகாரம் தொடர்பாக ‘நியூஸ்நவ்’ மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் முனீர் முலாஃபரிடம் விளக்கம் கேட்டது.

அதற்கு பதிலளித்த அமைச்சர், தற்போதைய நியமனம் தற்காலிகமானது என தெரிவித்தார்.

மேலும்,  இந்தப் பொறுப்புக்காக தகுதியான ஒரு முஸ்லிம் நபர் நியமிக்கப்படும் வரை, வெளியுறவு அமைச்சக அதிகாரியான சேனநாயக்க தற்காலிகமாக ஜெட்டா கொன்சல் ஜெனரல் பதவியை வகிப்பார் என்றும் அமைச்சர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

கொழும்பு மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்

கொழும்பு மாநகர சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின்...

பாடப்புத்தகத்தில் பொருத்தமற்ற வாசகம் தொடர்பான விசாரணையை ஆரம்பித்த கல்வி அமைச்சு!

தரம் 6 இல் ஆங்கிலப் பாடத் தொகுதியில் இடம்பெற்றுள்ள பொருத்தமற்ற வாசகம்...

மத சுதந்திரத்தை மதித்த இந்து பெற்றோர்: மகனை உம்ராவுக்கு வழியனுப்பி வைத்த நெகிழ்ச்சி சம்பவம்

தமிழ்நாட்டில் இருந்து சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்த, மனதை நெகிழவைக்கும்...

நாட்டில் சில பகுதிகளில் 75 மி.மீ. அளவான ஓரளவு பலத்த மழை

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர்...