டிசம்பர் மாதத்திற்கான முதியோர் உதவித்தொகையை தபால் நிலையங்கள் மூலம் இதுவரை பெறாத முதியோர், நாளை புதன்கிழமை (31) நண்பகல் 12.00 மணிக்கு முன்பதாக குறித்த உதவித்தொகையைப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவிக்கப்படுகிறது.
மேலும், இன்றுவரை உதவித்தொகையைப் பெறாதவர்கள், 2026-01-05 அன்று மீண்டும் அவற்றைப் பெற்றுக்கொள்ள முடியும் என தபால்மா அதிபருடன் நடைபெற்ற கலந்துரையாடலின் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
