மழையுடனான வானிலை காரணமாக டெங்கு பரவும் வேகம் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இதனால் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டமொன்றை தேசிய செஞ்சிலுவை சங்கம், சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு இணைந்து முன்னெடுத்துள்ளது. மழையின் பின்னர் டெங்கு பரவும் அவதானம் அதிகரித்துள்ளதாக பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் கபில கன்னங்கர சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால் டெங்கு பரவும் வகையில் சூழலை வைத்திருப்பதை தவிர்ப்பதற்கு பொதுமக்கள் கவனம் செலுத்த வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
