ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா சர்வதேச விமான நிலையத்தின் புதிய ‘முனையம் 1’ தமது பணிகளை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ஆரம்பித்துள்ளது.
வேலானா சர்வதேச விமான நிலையம் மூலம், புதிய ‘முனையம் 1’இற்கு வரும் UL101 விமானத்தின் பயணிகளுக்கும், அதே முனையத்திலிருந்து புறப்படும் UL102 விமானத்தின் பயணிகளுக்கும் ஒரு சிறப்பு வரவேற்பு விழாவை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக, மாலைத்தீவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் முகமது ரிஸ்வி ஹாசன் கலந்து கொண்டிருந்ததுடன் மாலைத்தீவு விமான நிலைய மற்றும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
