தொழில்நுட்பக் கோளாறு காரணமாக துருக்கிய ஏர்லைன்ஸ் விமானம் தரையிறக்கம்

Date:

கொழும்பில் இருந்து இஸ்தான்புல் நோக்கிச் சென்ற துருக்கி ஏர்லைன்ஸ் விமானம் TK 733, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அதிகாலை 12:28 மணிக்கு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) பாதுகாப்பாக தரையிறங்கியது.

இஸ்தான்புல் நோக்கிப் புறப்பட்ட இந்த பயணிகள் விமானம், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து (BIA) புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தரையிறங்கும் சாதனம் (Landing Gear) செயலிழந்ததாக அறிவித்தது. இதனையடுத்து அவசரகால நடைமுறைகள் பின்பற்றப்பட்டன.

முன்னெச்சரிக்கை அவசரகாலத் தரையிறக்கத்திற்கு முன்னதாக எரிபொருளைக் குறைப்பதற்காக (burn fuel) விமானம் வானில் சுற்றிக்கொண்டிருந்தது.

விமான நிலையத்தில் பாதுகாப்பு நடவடிக்கையாக தீயணைப்பு மற்றும் மருத்துவ அவசரகாலக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டன. விமானக் குழுவினர் நிலையான அவசரகால நெறிமுறைகளைப் பின்பற்றி வான்வழிப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுடன் தொடர்ச்சியான தொடர்பில் இருந்தனர்.

துருக்கி ஏர்லைன்ஸ் விமானத்தின் அவசர நிலைமை இருந்தபோதிலும், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மற்ற விமானங்களின் சேவைகளுக்கு எந்தவித இடையூறும் ஏற்படவில்லை என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

அடுத்துவரும் சில தினங்களுக்கு மழையுடனான வானிலை

கிழக்கிலிருந்தான ஒரு மாறுபடும் அலை காற்றின் தாக்கம் காரணமாக நாட்டின் வடக்கு...

பிபிசிக்கு எதிராக 10 பில்லியன் டொலர் இழப்பீடு கோரி அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் வழக்கு!

பிபிசி செய்திச் சேவையிடமிருந்து குறைந்தபட்சம் 10 பில்லியன் டொலர் இழப்பீடு கோரி...

மனிதாபிமானப் பணிக்குப் பின்னர் நாட்டிலிருந்து புறப்பட்ட ஜப்பானிய மருத்துவக் குழு!

புயல் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்கும் நோக்கில் இலங்கை...

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் (SLBC) நூற்றாண்டு விழா

நாட்டின் முதன்மை இலத்திரனியல் ஊடகத் தொடர்பாடல் நிறுவனமாகக் கருதப்படும் இலங்கை ஒலிபரப்புக்...