நூறு வீதம் முஸ்லிம்கள் வாழும் அனுராதபுர மாவட்டத்தின் பெரிய கிராமங்களில் ஒன்றான நாச்சியாதீவில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிப்பதற்காக இன்று அனுராதபுர மாவட்டத்தின் தலாவ மகாவலி H பகுதியைச் சேர்ந்த சிங்கள சகோதரர்கள் 600 உணவுப் பார்சல்களை தயாரித்து எடுத்து வந்து ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகிகளிடம் ஒப்படைத்தார்கள்.
அவர்களை தமது காரியாலயத்தில் வரவேற்ற நிர்வாகிகள் அவர்களுக்கு சிற்றுண்டிகளை வழங்கி கெளரவித்ததுடன் நன்றி தெரிவிப்பதற்காக விசேட கூட்டம் ஒன்றையும் நடத்தி அந்த பார்சல்களை ஊரில் சிறப்பாக பங்கீடு செய்தார்கள்.
இந்த சிங்கள சகோதரர்களது இந்த நடவடிக்கை இன நல்லிணக்கத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
இன ரீதியாக சிந்திக்கும் ஒரு சிறு குழுவினர் இந்த நாட்டில் இருப்பது போன்றே மனிதாபிமான அடிப்படையில், இன நல்லுறவை வளர்க்க வேண்டும் என்ற நோக்கத்தோடு சிந்திக்கும் சிங்கள சகோதரர்களும் இந்த நாட்டில் வாழுகிறார்கள் என்பதற்கு இது சிறந்த எடுத்துக்காட்டாகும்.

