பிபிசி செய்திச் சேவையிடமிருந்து குறைந்தபட்சம் 10 பில்லியன் டொலர் இழப்பீடு கோரி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திங்கட்கிழமை (15) வழக்குத் தொடர்ந்தார்.
அமெரிக்க கேபிடல் கலவரத்திற்கு முன்னதாக 2021 ஜனவரி 6 அன்று ஆதரவாளர்களுக்கு ட்ரம்ப் ஆற்றிய உரையினை பிரிட்டிஷ் ஒளிபரப்பாளர் திரிபுபடுத்தும் வகையில் கையாண்டதாகக் கூறி இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
மியாமியில் உள்ள ஃபெடரல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் பிபிசிக்கு எதிராக இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
புளோரிடாவின் ஏமாற்றும் மற்றும் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள் சட்டத்தின் மீறல்கள் மற்றும் அவதூறு குற்றச்சாட்டுகளைக் கூறி, டிரம்ப் ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் “$5,000,000,000 க்கு குறையாத தொகைக்கு இழப்பீடு” கோருகிறார்.
