மோசமான காலநிலை காரணமாக பேரிடருக்கு உள்ளான அனைத்து வழிபாட்டு தலங்களையும் துப்பரவு செய்து சமய நடவடிக்கைகளை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்காக உதவி வழங்குதல் பொருத்தமானதென அரசு தீர்மானித்துள்ளது.
அதற்கமைய, வழிபாட்டு தலங்களை துப்பரவு செய்து இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்காக ரூபா 25000/- கொடுப்பனவை வழங்குவதற்கும், அதற்கு தேவையான நிதி ஒதுக்கீட்டை புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகார அமைச்சுக்கு ஒதுக்கீடு செய்வதற்கும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
