மின்னல் தாக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை

Date:

மின்னல் தாக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மேல், சப்ரகமுவ மாகாணங்களுக்கும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கும் பலத்த மின்னல் தாக்கம் குறித்த எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இன்று (05) நண்பகல் 12.15 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவித்தல் இன்று இரவு 11.00 மணி வரை செல்லுபடியாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதற்கமைய, குறித்த அறிவித்தல் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் எனவும், மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் விபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

நாட்டிலிருந்து புறப்பட்ட இந்திய தேசிய பேரிடர் மீட்புப் படையினர்!

ஆப்ரேஷன் சாகர் பந்துவின் கீழ் தங்கள் பணியை வெற்றிகரமாக முடித்த பின்னர்,...

நாச்சியாதீவு மக்களுக்கு சிங்கள சகோதரர்களது மனிதாபிமான உதவி

நூறு வீதம் முஸ்லிம்கள் வாழும் அனுராதபுர மாவட்டத்தின் பெரிய கிராமங்களில் ஒன்றான...

ரயில் பருவச் சீட்டுக்களில் பஸ்களில் பயணிக்க வாய்ப்பு

நாட்டில் நிலவும் இயற்கை அனர்த்த நிலையில் பொது மக்களின் நலன் கருதி...

இலங்கையை மீண்டும் கட்டியெழுப்ப உச்சபட்ச ஆதரவை வழங்குவோம் – மாலைத்தீவு ஜனாதிபதி உறுதி

‘டிட்வா’ சூறாவளியால் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகளால் இலங்கை மக்கள்...