சர்வதேச அரபு மொழித் தினத்தை சகல முஸ்லிம் பாடசாலைகளிலும் அனுஷ்டிப்பதற்கு தேவையான வசதி வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு கல்வி அமைச்சு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
முஸ்லிம் பாடசாலை மாணவர்களிடையே அரபு மொழி கல்வியை நடைமுறை ரீதியாகச் செயற்படுத்தவும், அவர்களின் அரபு மொழித் திறனை மேம்படுத்தவும், அரபு மொழியுடன் தொடர்புடைய பாரம்பரிய, கலாசார மற்றும் அழகியல் அம்சங்களை இனங்கண்டு பரஸ்பர ஒத்துழைப்புடன் கூட்டாகச் செயற்படவும், பொருளாதார, சுற்றுலாத் துறை மற்றும் சர்வதேச உறவுகளை வலுப்படுத்துவதில் அரபு மொழியின் முக்கியத்துவத்தைச் எடுத்துக்காட்டும் வகையிலும், 18 சர்வதேச அரபு மொழி தினத்தை அனைத்து முஸ்லிம் பாடசாலைகளிலும் கொண்டாடுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
2. அதற்கமைய, 18.12.2025 ஆம் திகதி சர்வதேச அரபு மொழி தினத்தை முஸ்லிம் பாடசாலைகளில் கொண்டாடுவதற்குத் தேவையான வசதிகளையும் சந்தர்ப்பங்களையும் ஏற்படுத்திக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.
3. மேலும், பாடசாலைகளின் கற்றல்-கற்பித்தல் செயற்பாடுகளுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் சர்வதேச அரபு மொழி தினத்தைக் கொண்டாடுவதற்குப் பொருத்தமான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து, மாணவர்கள் மத்தியில் அரபு மொழி தொடர்பான ஆர்வத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் கல்வி அமைச்சு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
