கொழும்பு தேசிய மருத்துவமனையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லனவின் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
பொறுப்புவாய்ந்த பதவியொன்றை வகிக்கும் அரசாங்க மருத்துவ உத்தியோகத்தர் என்ற ரீதியில், பல்வேறு ஊடகங்கள் வாயிலாக நாட்டில் சர்ச்சைக்குரிய மற்றும் அமைதியற்ற சூழலை உருவாக்கும் வகையில் செயற்பட்டமை மற்றும் அனுமதியின்றி ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டமை ஆகிய காரணங்களுக்காக அவர் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
அவரது இந்த ஒழுக்கமற்ற செயல் காரணமாக, அரச சேவை ஆணைக்குழுவின் சுகாதார சேவைக்குழுவின் செயலாளரின் இலக்கம் HSC/DIS/070/2025 மற்றும் 2025.12.17 திகதியிட்ட கடிதத்தின் உத்தரவின் பேரில், நிறுவனச் சங்கத்தின் (Establishments Code) இரண்டாம் தொகுதியின் XLVIII ஆம் அத்தியாயத்தின் 31:1:15 ஆம் பிரிவின் கீழ் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் அவரது பணி இடைநிறுத்தப்பட்டுள்ளது.
அவரது வசம் அரசாங்கத்திற்குச் சொந்தமான ஏதேனும் பொருட்கள் இருந்தால், அவற்றை இலங்கை தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் நாயகத்தினால் நியமிக்கப்படும் ஒருவரிடம் ஒப்படைக்க வேண்டும்.
அத்துடன், பணி இடைநிறுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் அவர் நாட்டை விட்டு வெளியேறக்கூடாது எனவும், வசிப்பிடத்தில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் அதனைத் தெரியப்படுத்த வேண்டும் எனவும் அந்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
