வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்கள் நாட்டிற்கு அனுப்பிய பணம், நவம்பர் மாதத்தில் 673.4 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அதன்படி, 2025 ஆம் ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் வரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வந்த மொத்த பண அனுப்பல் 7.19 பில்லியன் அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டின் அதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், இது 20.7 சதவீத அதிகரிப்பு எனவும் இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த வளர்ச்சி, நாட்டின் வெளிநாட்டு நாணய கையிருப்பு நிலையை வலுப்படுத்துவதோடு, பொருளாதார மீட்புக்கு வெளிநாட்டு தொழிலாளர்களின் பங்களிப்பு தொடர்ந்தும் முக்கியத்துவம் பெற்றுள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
