GovPay ஊடாக நன்கொடை வழங்கும் வசதி!

Date:

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதை நோக்கமாகக் கொண்டு, GovPay ஊடாக நன்கொடைகளைச் செலுத்தக்கூடிய ஒரு வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நிதி அமைச்சினால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள அனர்த்த நிவாரண நிதியத்திற்கு நன்கொடைகளை வழங்குவதற்கு இலகுவானதும் வெளிப்படைத்தன்மை கொண்டதுமான இந்த முறைமை தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அரச கொடுப்பனவுக்கான பிரதானமாக விளங்கும் GovPay ஊடாக, எவர் வேண்டுமானாலும், எந்த நேரத்திலும், உடனடியாக நன்கொடைகளைச் செலுத்த முடியும்.

இதில், நன்கொடைப் பணம் உடனடியாக நிதிக்கு வரவு வைக்கப்படுவதுடன், வீட்டில் இருந்தோ அல்லது எங்கிருந்தோ இலகுவாக நன்கொடை வழங்கக்கூடியதாகவும், அத்துடன் அந்த செயல்முறை முழுமையாக வெளிப்படைத்தன்மையுடன் (Transparency) காணப்படுவதும் இதன் சிறப்பம்சமாகும் என டிஜிட்டல் பொருளாதார அமைச்சு அறிவித்துள்ளது.

GovPay உடன் இணைக்கப்பட்டுள்ள இலங்கையிலுள்ள வர்த்தக வங்கிகள் (Commercial Banks) மற்றும் அங்கீகரிக்கப்பட்ட FinTech செயலிகள் (Apps) பலவற்றின் மூலம் இந்த அனர்த்த நிவாரண நிதிக்கு நிதியுதவி வழங்க முடியும்.

நன்கொடைகளைச் செலுத்தக்கூடிய வங்கிகள் மற்றும் FinTech செயலிகளின் பட்டியலை அறிந்துகொள்ள https://govpay.lk/si/supported-banks-fintech என்ற இணைப்பிற்குச் செல்ல முடியும்.

Popular

More like this
Related

அமைதிப்பேச்சு: பாகிஸ்தான் சென்றார் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ்: பாகிஸ்தானில் உற்சாக வரவேற்பு.

ஈரான் உடனான அமைதிப் பேச்சுவார்த்தையை மேற்கொள்ள பாகிஸ்தான் வந்த அமெரிக்க துணை...

வாகனங்களுக்கான எரிபொருள் QR முறைமை நீக்கம்?

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு, இன்று (11) முதல் எதிர்வரும் 18ஆம் திகதி...

ஆசிரிய சேவையிலிருந்து ஓய்வு பெறும் ஆரம்பப்பிரிவு ஆசிரிய ஆலோசகர் மௌபியா அவர்களுக்கு கஹட்டோவிட்டவில் கௌரவிப்பு!

கம்பஹா மற்றும் மினுவாங்கொட கல்வி வலயங்களில் நீண்டகாலமாக ஆரம்பப்பிரிவு ஆசிரிய ஆலோசகராகப்...

தமிழ்- சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு!

நாட்டின் பொதுமக்களின் மிக முக்கியமான பாரம்பரிய விழாவான சித்திரை புத்தாண்டு காலத்தில்...