இந்த ஆண்டின் ஜனவரி மாதம் முதல் நேற்று (30) வரையிலான காலப்பகுதியில், 738 இலங்கையர்களுக்கு இஸ்ரேலில் தாதியர் பராமரிப்புத் துறையில் வேலைவாய்ப்புகள் கிடைத்துள்ளன.
இஸ்ரேலின் இல்லம் சார்ந்த பராமரிப்புப் பணிகளுக்காக நேற்று (30) புறப்பட்டுச் சென்ற 191 ஆவது குழுவைச் சேர்ந்த 6 பணியாளர்களுக்கு விமான Tickets வழங்கும் நிகழ்வு, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் மேலதிக பொது மேலாளர் ஏ.கே.யு. ரோஹண தலைமையில் பணியகத்தில் நடைபெற்றது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்கும், இஸ்ரேலின் ‘பீபா’ (PIBA) நிறுவனத்திற்கும் இடையில் எட்டப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில், இதுவரை மொத்தம் 2,628 இலங்கையர்களுக்கு இஸ்ரேலிய தாதியர் துறையில் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
இரு நாடுகளுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ உடன்படிக்கையின் கீழ் இந்த வேலைவாய்ப்புகள் வழங்கப்படுவதால், இஸ்ரேலில் இத்துறை சார்ந்த வேலைகளைப் பெற்றுக்கொள்வதற்காக எவருக்கும் பணம் வழங்க வேண்டாம் என வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
