உள்நாட்டு உற்பத்திகளை சர்வதேச சந்தைக்கு அறிமுகப்படுத்தும் ‘Made in Sri Lanka’ விற்பனை கண்காட்சி, மாத்தறை- வெலிகம கடற்கரைப் பகுதியில் நேற்று (26) ஆரம்பமானது.
உள்நாட்டு உற்பத்திகளை சர்வதேச ரீதியில் கொண்டு செல்லும் நோக்குடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘Made in Sri Lanka’ விற்பனை கண்காட்சி, மாத்தறை- வெலிகம கடற்கரையை மையப்படுத்தி இன்று (26) ஆரம்பமானது. வெலிகமவில் ஆரம்பமான இக்கண்காட்சி நாளை (28) நிறைவடையும்.
முற்பகல் 10 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறும் இக்கண்காட்சி, அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி மற்றும் பிரதி அமைச்சர்களான சதுரங்க அபேசிங்க, அர்க்கம் இல்லியாஸ் ஆகியோரின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.
தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய தொழில்முனைவோர் அபிவிருத்தி அதிகார சபையினால் (NEDA) இக்கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் நடைபெறும் ‘Made in Sri Lanka’ கண்காட்சி இம்முறை 128 விற்பனை கூடங்களைக் கொண்டுள்ளது. இங்கு கொள்வனவு செய்யப்படும் பொருட்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கான கூரியர் (Courier) வசதிகளும் அந்த வளாகத்திலேயே ஏற்படுத்தப்பட்டுள்ளன.
