முசலி பிரதேச கிராம உத்தியோகத்தர்கள் தொடர்ந்து தாக்கப்படுகின்றமையை கண்டித்து இன்று (31) முசலி பிரதேச செயலகத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தாக்கப்பட்ட கிராம உத்தியோகத்தர் சிலாபத்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் தாக்கியவர் இதுவரை கைது செய்யப்படவில்லை.
அரசாங்கத்தின் அனர்த்தம் தொடர்பான அறிவித்தலுக்கு அமைய செயற்படும்போது போதுமக்களால் தாம் தாக்கப்படுகின்றோம், அறிவித்தலுக்கு மாற்றமாக நாம் எவ்வாறு செயற்படுவது.
எனவே, எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என முசலி பிரதேச கிராம உத்தியோகத்தர் சங்கய்தின் தலைவர் ப. அஸீம் தெரிவித்தார்.
இவ்வாறு எமது உத்தியோகத்தர்கள் தொடர்ந்து தாக்கப்படுகின்றனர். எனவேதான் நாம் இந்த ஆர்ப்பாட்ட ஏற்பாடுகளை மேற்கொண்டோம் என அவர்கள் தெரிவித்தனர்.

