நாட்டின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், வரும் நாட்களில் தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
டெங்கு, சிக்குன்குனியா மற்றும் லெப்டோஸ்பிரோசிஸ் பரவுவதற்கான கடுமையான ஆபத்து இருப்பதாக சங்கத்தின் செயலாளர் சமில் முத்துக்குட குறிப்பிட்டார்.
நாட்டைப் பாதித்த அண்மைய அவசரகால பேரிடர் சூழ்நிலை காரணமாக, வரும் நாட்களில் கடுமையான தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளன.
அதன்படி, டெங்கு, சிக்குன்குனியா மற்றும் லெப்டோஸ்பிரோசிஸ் பரவுவதற்கான அதிக ஆபத்து உள்ளது.
மேலும், தொற்றாத நோய் நிலைகளில் சிறிது அதிகரிப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கிறோம்.
பேரிடர் சூழ்நிலை காரணமாக அவர்களின் மருந்துகள் காணாமல் போயிருக்கலாம்.
எனவே, இந்த நோயாளிகளுக்கு நாங்கள் சிறப்பு கவனம் செலுத்தி வருகின்றோம் – என்றார்.
