சுனாமி ஆழிப்பேரலை அனர்த்தத்தின் 21வது ஆண்டு நினைவை முன்னிட்டு, இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் பல்வேறு இடங்களிலும் நினைவேந்தல்கள் நடைபெற்றன.
சுனாமி பேரழிவு மற்றும் பிற பேரிடர்களில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் காலை 9.25 மணி முதல் 9.27 மணி வரை இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
காலியில் உள்ள ‘பேரலிய சுனாமி நினைவிடத்தில்’ இன்று வெள்ளிக்கிழமை (26) காலை 8.30 மணி முதல் 11 மணி வரை விசேட நிகழ்வுகள் இடம்பெற்றன, இதில் வாழ்ந்தோரும், குடும்பத்தினரும், பொதுமக்களும் கலந்து கொண்டு அனர்த்த நினைவுகளை நினைவுகூரினர்.
யாழ்ப்பாணம்,திருகோணமலை, முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, ஹட்டன், மட்டக்களப்பு, மண்முனை, வவுனியா, தம்பலகாமம், திருகோணமலை உள்ளிட்டபல பகுதிகளிலும் நினைவஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

