தற்போது சமூக ஊடகங்களில் பேசும்பொருளாக மாறியுள்ள கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க கல்லூரி மாணவியின் உரை தொடர்பில் கல்வியமைச்சு குறித்த பாடசாலை அதிபரிடம் அறிக்கையொன்றை கோரியுள்ளது.
கல்லூரியில் அண்மையில் இடம்பெற்ற வண்ண விருது விழாவில் மாணவி விமர்சனத்திற்குரிய கருத்துக்களை வெளியிட்டிருந்தார். இந்த விடயம் சமூக ஊடகங்களில் பரவலானதையடுத்து, இது தொடர்பில் கல்வியமைச்சு விசேட அவதானம் செலுத்தியது.
கல்லூரி அதிபர் தலைமையிலான நிர்வாகத்தின் விருது வழங்கல் தீர்மானங்களால் தான் அநீதிக்கு உள்ளானதாக மாணவி கருத்து வெளியிட்டார்.
இந்நிலையில் கல்வியமைச்சு கோரியுள்ள அறிக்கையை பாடசாலை அதிபர் வழங்கியதன் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக கல்வியமைச்சின் செயலாளர் நாலக கலுவௌ தெரிவித்துள்ளார்.
