டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’நிதியத்திற்கு, நாளாந்தம் நன்கொடைகள் கிடைத்து வருகின்றன.
நேற்று (09) பல்வேறு தனியார் நிறுவனங்கள் தமது நிதி நன்கொடைகளை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் கையளித்தன.
1- Macksons Paints Lanka (Pvt.) Ltd நிறுவனத்தின் தலைவர் மில்பர் மகீன் 15 மில்லியன் ரூபா
2- Sirilak Sea Food (Pvt.) Ltd நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் டி. ஏ. நிஷ்ஷங்க, 05 மில்லியன் ரூபா
3- Narmatha Gold Center (Pvt.) Ltd நிறுவனத்தின் தலைவர் என். ஜெகதீஸ்வரன், 2.5 மில்லியன் ரூபா
4- IWW Steel Industries தனியார் நிறுவனத்தின் தலைவர் கலாநிதி சிவலிங்கம் ரமேஷ், 2.5 மில்லியன் ரூபா என்ற வகையில் நிதி நன்கொடைகள் அளிக்கப்பட்டன.