நாட்டில் நிலவும் இயற்கை அனர்த்த நிலையில் பொது மக்களின் நலன் கருதி ரயில்வே மாதாந்த பருவச்சீட்டை இலங்கை போக்குவரத்து சபை பஸ்களிலும் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் ரயில் பயணத்திற்கான பருவச் சீட்டை இ.போ.ச பஸ்களில் காட்டி தமது பயணத்தைத் தொடர முடியும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
அதற்கிணங்க இலங்கை போக்குவரத்து சபையின் அதி சொகுசு பஸ்கள் தவிர்ந்த ஏனைய சாதாரண பஸ்களில் ரயில்வே மாதாந்த பருவச்சீட்டைப் பயன்படுத்தி போக்குவரத்து நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.
அது தொடர்பில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் இலங்கை போக்குவரத்து சபை மேலும் தெரிவித்துள்ளது.
