அடுத்த சில நாட்களில் காற்றின் தரம் மோசமடையக்கூடும்

Date:

கடந்த 24 மணித்தியாலங்களில் இலங்கையின் பிரதான நகரங்களில் வளிமண்டலத்தின் தரம் ‘மிதமான’ (Moderate) மட்டத்திலேயே காணப்பட்ட போதிலும், வரும் நாட்களில் சில பகுதிகளில் அது மோசமடையக்கூடும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) எதிர்வு கூறியுள்ளது.

ஜனவரி 27ஆம் திகதி வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, பெரும்பாலான நகர்ப்புறங்களில் நுண் துகள்களின் (PM2.5) அளவு மிதமான மட்டத்தில் இருந்தது. அதேவேளை, வவுனியா, நுவரெலியா, எம்பிலிப்பிட்டிய, திருகோணமலை, முல்லைத்தீவு, மட்டக்களப்பு மற்றும் மொனராகலை ஆகிய பகுதிகளில் ‘நல்ல’ (Good) வளிமண்டலத் தரம் பதிவாகியுள்ளது.

யாழ்ப்பாணம் மற்றும் புத்தளம் உள்ளிட்ட பல நகரங்களில் வளிமண்டலத் தரம் ‘மிதமான’ நிலையிலிருந்து ‘ஓரளவு ஆரோக்கியமற்ற’ (Slightly Unhealthy) நிலைக்கு மாறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வடக்கு பிராந்தியத்திலிருந்து வீசும் மாசடைந்த காற்று (Transboundary pollution) காரணமாக, அடுத்த 2 முதல் 3 நாட்களுக்கு நாடு முழுவதும் வளிமண்டலத் தரம் ஆரோக்கியமற்ற நிலைக்குச் செல்லக்கூடும்.

பொதுமக்களை இயலுமானவரை முகக்கவசம் (Face Mask) அணியுமாறு NBRO அறிவுறுத்தியுள்ளது. சுவாசம் தொடர்பான பாதிப்புள்ளவர்கள், ஏதேனும் சிரமங்களை உணர்ந்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெறுமாறு கோரப்பட்டுள்ளனர்.

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில்

இன்றையதினம் (13) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை,...

விசேட தேவையுடையோருக்கென பிரத்தியேக பஸ் சேவை

வேலைத்திட்டத்தின் கீழ் விசேட தேவையுடைவர்களுக்கான முன்னுரிமை அடிப்படையிலான பஸ் சேவைக்கான பஸ்கள்...

இலங்கையின் சனத்தொகை மாற்றம்: காலநிலை மாற்றம் மற்றும் கொள்கை குறைபாடுகளால் ஏற்படும் சமூக-பொருளாதார நெருக்கடிகள்

இலங்கை ஒரு விரைவான சனத்தொகை மாற்றத்தை எதிர்கொண்டு வருகின்றது. தற்போது நாட்டின்...

இலங்கையின் புதிய இராஜதந்திரிகள் தூதுவர்களின் நியமனங்களுக்கு நாடாளுமன்றம் அனுமதி

வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களின் பிரதானிகளாக நியமிக்கப்படுவதற்காக, அண்மையில் ஜனாதிபதி அநுர...