இஸ்ரேலிலுள்ள இலங்கையர்களுக்கு அறிவித்தல்

Date:

இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்கள் அனைவரும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண பாதுகாப்புச் சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு, மிகுந்த அவதானத்துடன்செயற்படுமாறு இஸ்ரேலிலுள்ள இலங்கைத் தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.

இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் எந்தவொரு வளர்ந்து வரும் அச்சுறுத்தலையும் கட்டுப்படுத்தத் தயாராக இருப்பதாகவும், இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சு தொடர்ந்தும் தகவல் மற்றும் ஆலோசனைகளைப் புதுப்பிக்கும் என்றும் இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார, சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏவுகணைத் தாக்குதல்கள் போன்ற அவசர நிலைகள் ஏற்பட்டால், அது குறித்த தகவல்கள் உடனுக்குடன் உங்களது ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசி அனுப்பி வைக்கப்படும் எனவும், அபாய எச்சரிக்கை சத்தம் கேட்டால், உடனடியாக அருகிலுள்ள பாதுகாப்பு அறைகளுக்குச் சென்று தஞ்சம் அடையுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

நிலவும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு,இன்று சனிக்கிழமை (31) காலை 10 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை தூதரகம் திறந்திருக்கும் என்றும், இந்த நேரத்தில் வழக்கமான பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...

சிறுவர்களுக்கான அன்றாட துஆக்கள் மற்றும் ஒழுக்கங்கள்: மும்மொழிகளில் புதிய நூல் வெளியீடு!

பிள்ளைகள் அன்றாட வாழ்வில் ஓத வேண்டிய துஆக்கள் மற்றும் அவர்கள் கடைப்பிடிக்க...