சிரிய அரசு – குர்திஷ் ஆயுதக் குழு இடையே போர்நிறுத்த ஒப்பந்தம்.

Date:

சிரியாவில் செயல்பட்டு வரும் குர்திஷ் இன மக்களின் ஆயுதக் குழுவான சிரிய ஜனநாயகப் படையுடன்(STF), அந்நாட்டு அரசு போா்நிறுத்த ஒப்பந்தத்தை அறிவித்துள்ளது.

இதன்மூலம், சிரியாவில் அதிகாரப் பகிா்வுக்காக கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேல் நடந்து வந்த உள்நாட்டுப் போா் முடிவுக்கு வந்துள்ளது.

அமெரிக்காவின் சிறப்புப் பிரதிநிதி டாம் பாரக் முன்னிலையில் இறுதியான இந்த ஒப்பந்தத்தைத் தொடா்ந்து, எஸ்டிஎஃப் கட்டுப்பாடில் இருந்த ரக்கா நகருக்குள் அரசுப் படைகள் முறைப்படி நுழைந்தன.

கடந்த 2024-ஆம் ஆண்டு டிசம்பரில், முன்னாள் ஜனாதிபதி அல்-அஸாத்தின் ஆட்சி வீழ்த்தப்பட்ட பிறகு, நாடு முழுவதும் அரசின் கட்டுப்பாட்டைக் கொண்டுவரப் போராடி வந்த இடைக்கால ஜனாதிபதி அஹ்மது அல்-ஷாரா, இந்த ஒப்பந்தம் குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளாா்.

‘இந்த வெற்றி அனைத்து சிரிய மக்களுக்கும் சொந்தமானது; நாடு பிரிவினையிலிருந்து ஒற்றுமையை நோக்கி நகா்கிறது’ என்று அவா் பெருமிதத்துடன் கூறினாா்.

இந்தப் போா்நிறுத்த ஒப்பந்தத்தின்படி, வடகிழக்கு சிரியாவின் பெரும்பகுதிகள் மீண்டும் அரசின் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளன.

குர்திஷ்  ஆயுதக் குழு கலைக்கப்பட்டு, சிரிய இராணுவத்துடன் இணைக்கப்படும். எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்கள் அதிகம் கொண்ட ரக்கா மற்றும் டெய்ர் எல்-சோா் மாகாணங்கள் இனி அரசின் வசம் இருக்கும்.

மேலும், குர்திஷ்  படைகளின் கட்டுப்பாட்டில் இருந்த ஹசாகா மாகாண நிா்வாகம் மற்றும் ஐ.எஸ். உறுப்பினர்கள் உள்ள சிறைகள் அனைத்தும் இனி அரசின் மேற்பாா்வையில் இயங்கும்.

ஐ.எஸ். உறுப்பினர்களுக்கு எதிரான போரில் பெரும் பங்காற்றிய எஸ்.டி.எஃப், இனி நாட்டின் பாதுகாப்புப் படையில் ஒரு அங்கமாக இருக்கும். அந்த அமைப்பின் தலைவா்களுக்கு அரசு நிா்வாகத்தில் முக்கியப் பொறுப்புகள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அதிகார மாற்றங்கள் அனைத்தும் படிப்படியாகச் செயல்படுத்தப்படும் என்று அதிபா் அஹ்மது அல்-ஷாரா தெரிவித்துள்ளாா். மேலும், உறுப்பினர்கள் குர்திஷ்  இன மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் அவா் ஒரு சிறப்பு ஆணையையும் பிறப்பித்துள்ளாா்.

நீண்ட காலப் பிரிவினைக்குப் பிறகு, நாட்டின் முக்கிய எல்லைப் பகுதிகள் மற்றும் மின் நிலையங்கள் ஒரே நிா்வாகத்தின்கீழ் வருவதால், சிரியாவின் பொருளாதார மீட்சிக்கு வழிவகுக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

தொடரும் ‘Newsnow’இன் மனிதாபிமானப் பணிகள்: தெல்தோட்டை மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கி வைப்பு

கடந்தாண்டு டிசம்பர் மாதத்தில் டிட்வா புயல், முழு நாட்டையும் உலுக்கி பெரும்...

தனியார் துறையினருக்கான சம்பளம் 3,000 ரூபாவால் அதிகரிப்பு!

2026 ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் தனியார் துறையின்...

போதைப்பொருள் குறித்த தகவல்களை வழங்க தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

2026 ஆம் ஆண்டில் திட்டமிட்ட முறையில் முன்னெடுக்கப்படவுள்ள போதைப்பொருள் ஒழிப்புச் சுற்றிவளைப்புகளுக்காக,...

பஸ்கள் தரிப்பிடங்களுக்கு வரும் நேரங்களை அறிந்துகொள்ள புதிய செயலி

தென் மாகாணத்தில் பயணிகள் பஸ்கள் தரிப்பிடங்களுக்கு வரும் நேரங்களை அறிந்துகொள்வதற்கு புதிய...