‘டிரம்ப் ஒரு கோழை, தைரியம் இருந்தால் என்னை கைது செய்யட்டும்’: டிரம்ப்புக்கு கொலம்பியா அதிபர் சவால்!

Date:

டொனால்ட் டிரம்ப் ஒரு கோழை, துணிவிருந்தால் என்னை கைது செய்யட்டும் என கொலம்பியா ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ சவால் விட்டுள்ளார்.
 
வெனிசுவேலாவின் தலைநகர் காரகஸ் உள்ளிட்டப் பகுதிகளில் அமெரிக்க இராணுவம் அதிரடியாக அத்துமீறி வான்வெளித் தாக்குதலைத் தொடர்ந்து, அந்நாட்டு அதிபர் நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா ஃபுளோரஸ்ஸையும் அமெரிக்க படைகள் கைது செய்து, நாடு கடத்தி அமெரிக்காவின் நியூயாா்க் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜர்படுத்தியது.
 
இந்த விவகாரம் உலகளாவிய அரசியலில் மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய சூழலில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்புக்கு துணிவிருந்தால் என்னை கைது செய்து அழைத்துச் செல்லட்டும் என கொலம்பியா ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ சவால் விட்டுள்ளார்.
 
இதுதொடர்பாக குஸ்டாவோ பெட்ரோ கூறுகையில், “நான் யாருக்காகவும் பயப்படவில்லை. நீ விரும்பினால் உனக்காக நான் இங்கு காத்திருக்கிறேன். படையெடுப்புகளையோ, படுகொலைகளையோ, ஏவுகணைத் தாக்குதல்களையோ நான் ஏற்கவில்லை.
 
நான் உளவுத்துறையை ஏற்றுக்கொள்கிறேன். உளவுத்துறையுடன் வாருங்கள். நேருக்கு நேர் மோதிப் பார்ப்போம். அரசியல் மாஃபியாக்களால் கொலம்பிய மக்களை ஏமாற்றுவதை முதலில் நிறுத்துங்கள்.
 
கொலம்பியர்கள் 7 லட்சம் பேருக்கு அவர்கள் மரண தண்டனை அளித்துள்ளனர். நான் மீண்டும் ஒரு ஆயுதத்தைத் தொடமாட்டேன் என்று சத்தியம் செய்திருக்கிறேன்.
 
ஆனால், தாய்நாட்டிற்காக நான் மீண்டும் ஆயுதம் ஏந்தவும் தயாரக இருக்கிறேன்” என சவால் விடுத்துள்ளார்.

Popular

More like this
Related

புத்தாண்டு என்பது பண்டிகை மட்டுமல்ல, எமது கலாசார விழுமியங்களில் பொதிந்துள்ள சுபீட்சம், ஒற்றுமை, சகவாழ்வு: பிரதமரின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி!

சூரியன் மீன இராசியிலிருந்து மேஷ இராசிக்குச் சங்கமிப்பதையும், அறுவடைப் பணிகள் நிறைவடைந்து...

கூட்டுச் செயல்பாடுகள் மூலம் வெளிப்படும் சமூக-கலாசார பிணைப்புடன் இந்த புத்தாண்டு அமைய நல்வாழ்த்துகள்: ஜனாதிபதியின் புத்தாண்டு செய்தி

பௌதீக ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் மாற்றம் பெறுவதை அடையாளப்படுத்தும் சிங்கள மற்றும்...

அமைதிப்பேச்சு: பாகிஸ்தான் சென்றார் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ்: பாகிஸ்தானில் உற்சாக வரவேற்பு.

ஈரான் உடனான அமைதிப் பேச்சுவார்த்தையை மேற்கொள்ள பாகிஸ்தான் வந்த அமெரிக்க துணை...

வாகனங்களுக்கான எரிபொருள் QR முறைமை நீக்கம்?

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு, இன்று (11) முதல் எதிர்வரும் 18ஆம் திகதி...