நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் இன்று பணிப்புறக்கணிப்பில்!

Date:

இன்று (23) காலை 8 மணி முதல் 48 மணிநேர காலப்பகுதியில் நாடளாவிய ரீதியிலுள்ள அரச வைத்தியசாலைகளில் உள்ள வைத்தியர்கள் அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இலவச சுகாதார சேவை மற்றும் வைத்தியர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பில் சுகாதார அமைச்சு வழங்கிய இணக்கப்பாடுகளை நடைமுறைப்படுத்தத் தவறியமையினாலேயே இந்த தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக அந்தச் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும், மகப்பேற்று வைத்தியசாலைகள், சிறுவர் வைத்தியசாலைகள், சிறுநீரக வைத்தியசாலைகள் மற்றும் புற்றுநோய் வைத்தியசாலைகள் என்பன வழமைப்போல் இயங்கும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றம்!

நேற்று (10) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயு...

சமாதானம்,நல்லிணக்கம் தொடர்பில் காணப்படும் சவால்கள், பிரச்சினைகள் தொடர்பிலான மதத் தலைவர்களுக்கான கலந்துரையாடல்.

-புத்தளம் எம். யூ. எம். சனூன் புத்தளம் மாவட்டத்தின் அபிவிருத்திப் பிரச்சினைகள், தற்போதைய...

புகழ்பெற்ற எகிப்திய காரி மஹ்மூத் அல்-ஷஹாத் அன்வருக்கு அங்காராவில் மாபெரும் கௌரவம்

புனித அல்குர்ஆன் அருளப்பட்ட மாதத்தில் துருக்கி ஜனாதிபதி ரசப் தயிப் அர்தூகான்...

நாட்டின் சில பகுதிகளில் சிறிதளவு மழை பெய்யக்கூடும்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல்...