நிலவும் வரண்ட வானிலை நாளை முதல் மாற்றமடையும்

Date:

நாட்டில் தற்போது நிலவும் வரண்ட வானிலை நாளை (23) வெள்ளிக்கிழமையிலிருந்து மாற்றமடையும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இன்றையதினம் (22) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக வரண்ட வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் அதிகாலை வேளையில் துகள் உறைபனி காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், வடமத்திய, ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை, அம்பாறை, வவுனியா மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பிரதானமாக மழையற்ற வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு, வடக்கு திசைகளிலிருந்து வீசக் கூடும்.

காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மன்னாரிலிருந்து புத்தளம் மற்றும் கொழும்பு ஊடாக களுத்துறை வரையிலும் மற்றும் அம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையிலுமான கரையயோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 கி.மீ. வேகம்  வரை அதிகரிக்கலாம்.

Popular

More like this
Related

தேசிய மீலாத் கண்காட்சியில் பெரியமுல்லை அஹதியா மாணவர்களின் மகத்தான பணி!

நடந்து முடிந்த 42வது தேசிய மீலாத் விழா பல்வேறு சிறப்பம்சங்களோடு மிகக்...

தேசிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவில் முஸ்லிம் பிரதிநிதியை நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் MCSL கோரிக்கை

தேசிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவில் முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் உறுப்பினர்...

வறட்சியால் இலங்கையின் பல மாவட்டங்கள் பாதிப்பு: பால் உற்பத்தி வீழ்ச்சி, குடிநீர் தட்டுப்பாடு மற்றும் வனவிலங்குகள் அவதி

இலங்கையில் நிலவும் கடுமையான வறட்சியான காலநிலை காரணமாக அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை...