பாடசாலை நேரத்தை நீடிக்காதிருக்க கல்வி அமைச்சு தீர்மானம்!

Date:

2026 ஆம் ஆண்டில் பாடசாலை நேரத்தை நீடிக்காதிருக்க கல்வி அமைச்சினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாட்டினுள் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமை, சில மாகாணங்களில் பாடசாலைக் கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து கட்டமைப்புக்கு ஏற்பட்டுள்ள சேதங்களைக் கருத்திற் கொண்டு, பாடசாலைக் மற்றும் போக்குவரத்து கட்டமைப்புக்கள் வழமைக்குத் திரும்பும் வரை 2026 ஆம் ஆண்டில் பாடசாலை நேரத்தை நீடிக்காதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அந்த அறிக்கைக்கு அமைவாக அமைவாக, 2026 ஆம் ஆண்டில் 05 – 13 வரையான தரங்களுக்கான பாடசாலை நேரம் காலை 07.30 மணி முதமல் பிற்பகல் 01.30 மணிவரை மாற்றமின்றி தொடரும்.

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்கள் 2026 ஆம் ஆண்டின் முதல் தவணைக்காக ஜனவரி 05 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன.

தரம் 06 முதல் தரம் 13 வரை ஒரு நாளுக்கான பாடசாலை வேளைகளின் எண்ணிக்கை 07 ஆகும்.

ஒரு பாடசாலை வேளைக்காக ஒதுக்கப்பட்ட நிமிடங்கள் 45. 2026 ஆம் ஆண்டில் கல்வி மறுசீரமைப்புச் செயற்பாடு தரம் 1 மற்றும் தரம் 6 இற்கு நடைமுறைப்படுத்தப்படும்.

கல்வி மறுசீரமைப்புச் செயற்பாட்டின் கீழ், தரம் 6 இற்கான கல்வி நடவடிக்கைகள் உத்தியோகபூர்வமாக 2026 ஜனவரி 21 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன.

தரம் 1 இற்கான மாணவர்களை அறிமுப்படுத்தும் செயற்பாடு 2026 ஜனவரி 05 ஆம் திகதி ஆரம்பமாவதுடன், உத்தியோகப்பூர்வமாக கல்வி நடவடிக்கைகள் 2026 ஜனவரி 29 ஆம் திகதி ஆரம்பமாகும்.

தரம் 1 இற்குரிய செயற்பாட்டு புத்தகங்கள் மற்றும் தரம் 6 இற்குரிய கற்றல் தொகுதிகள் (Learning Modules), அந்தந்த தரங்களின் கல்வி நடவடிக்கை ஆரம்பமாகவதற்கு முன்னர் மாணவர்களுக்கு வழங்கி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஏனைய தரங்களுக்கு தேவையான பாடப்புத்தகங்கள் இதுவரையில் வழங்கி முடிக்கப்பட்டுள்ளன.

2025 க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பகுதி ஜனவரி 12 முதல் ஜனவரி 20 ஆம் திகதி வரை நடத்தப்படவுள்ளது.

இது தொடர்பான விரிவான சுற்றுநிருபம் 2026 ஜனவரி 02 ஆம் திகதி வெளியிடப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

இராஜதந்திர நியமனங்களில் ஜித்தா ஏன் ஒரு விதிவிலக்காகிறது ?

ஜித்தாவுக்கான கொன்சல் ஜெனரல் நியமனம் தொடர்பில் முஸ்லிம் சமூகத்தில் பெரும் அதிருப்தி...

பாடசாலை மாணவர்களுக்கு 6,000 ரூபாய் உதவித்தொகை: வங்கிக் கணக்குகளில் வைப்பீடு

பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கான 6,000 ரூபாய் உதவித்தொகை...

உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பகுதிக்கான திகதி அறிவிப்பு!

2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பகுதி எதிர்வரும்...