கர்ப்பகாலத்தில் 13 சதவீதத்திற்கும் அதிகமான தாய்மார்களுக்கு நீரிழிவு நோய் (Diabetes) ஏற்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
தவறான உணவுப் பழக்கவழக்கங்களும் இதற்கு ஒரு காரணமாக அமைந்துள்ளதாக இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவரும், நீரிழிவு மற்றும் நாளமில்லாச் சுரப்பி நோய்கள் தொடர்பான விசேட வைத்திய நிபுணருமான மணில்க சுமனதிலக தெரிவித்துள்ளார்.
