இலங்கை ஜமாஅதே இஸ்லாமி கொலன்னாவ கிளையினால் 12 வது வருடமாக ஏற்பாடு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் பகிர்ந்தளிக்கும் வைபவம் கொலன்னாவ மங்களபாய மண்டபத்தில் 4 ஆம் திகதி வெகுவிமர்சையாக நடைபெற்றது.
செல்வன் அப்துல்லா சித்தீகின் கிராஅத்துடன் ஆரம்பமான நிகழ்ச்சியில் அஷ்ஷேய்க் யாசிர் இஸ்மாயில்(இஸ்லாஹி) அவர்களினால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது.
அவர் தனதுரையில் இஸ்லாம் கல்விக்கு கொடுத்துள்ள முக்கியத்துவத்தை வலியுறுத்தியதுடன் ஒரு “கஷ்டத்துக்குப் பின் இலக்கு இருக்கின்றது” என்ற திருமறை வசனத்தை விவரித்தார்.
இதனைத்தொடர்ந்து இலங்கை ஜமாஅதே இஸ்லாமி கொழும்பு பிராந்திய தலைவர் அஷ்ஷேஹ் சில்மி ஜுமான் (இஸ்லா ஹி) அவர்கள் பிரதான உரையை நிகழ்த்தினார்.
அவர் தனது உரையில் இஸ்லாம் மனிதன் பிற மனிதர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள் பற்றியும் “உங்களில் சிறந்தவர் மற்ற மனிதர்களுக்கு பயனுள்ளவர்களாக வாழ்பவர்கள்” என்ற நபிமொழியை நினைவூட்டி அதன்படி செயல்பட ஆர்வம் ஊட்டினார்.
இதனைத் தொடர்ந்து தன்வீர் அகடமியின் மாணவன் காலித் மஸ்ஊத் அவர்களது சிங்கள மொழி கவிதை ( விருது)சபையோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
இதை அடுத்து 500 தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு அதிதிகளாக வருகை வந்திருந்த கிராம சேவகர்கள், பள்ளி வாசல் நிர்வாக சபை உறுப்பினர்கள், பாடசாலை அதிபர்கள், ஜமாஅத் தின் பிரமுகர்கள் ஆகியோரால் கற்றல் உபகரணங்கள் கொடுக்கப்பட்டன.
இறுதியாக சகோதரர் அஹியார் அவர்களது நன்றி உரையுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.

