இவ்வருடத்தின் கடந்த 22 நாட்களில் மாத்திரம் 194,553 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
குறித்த காலப்பகுதியில் கடந்த 15ம் திகதியே அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
குறித்த எண்ணிக்கை 10483 ஆக பதிவாகியுள்ளது. கடந்த 22ம் திகதி வரை வருகை தந்த சுற்றுலாப் பயணிகளில் அதிகளவானோர் இந்தியாவிருந்து வந்துள்ளனர்.
இதற்கு அடுத்தபடியாக ரஷ்யா, ஐக்கிய இராச்சியம், ஜேர்மன் ஆகிய நாடுகளின் சுற்றுலாப் பயணிகளும் அதிகளவில் வருகை தந்துள்ளனர்.
