2025 க.பொ.த உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பாடங்களுக்கான மேலதிக வகுப்புகளை நடத்துவது இன்று (06) நள்ளிரவு முதல் பரீட்சை முடியும் வரை தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
பாட ரீதியான விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் பயிற்சிப் பட்டறைகளை நடத்துதல், மாதிரி வினாத்தாள்களை அச்சிடுதல் மற்றும் விநியோகித்தல்.
பரீட்சை வினாக்களுக்கு நிகரான வினாக்களை வழங்குவதாகக் கூறி சுவரொட்டிகள், பதாகைகள், துண்டுப் பிரசுரங்கள் அல்லது இலத்திரனியல்/அச்சு ஊடகங்கள் வாயிலாக விளம்பரப்படுத்துதல்.
இந்த உத்தரவுகளை மீறும் நபர்கள் அல்லது நிறுவனங்கள் பரீட்சைகள் சட்டத்தின் கீழ் குற்றவாளிகளாகக் கருதப்படுவர். இவ்வாறான சட்டவிரோத செயல்கள் தொடர்பில் பின்வரும் இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்:
அருகிலுள்ள பொலிஸ் நிலையம் அல்லது பொலிஸ் தலைமையகம்.
பொலிஸ் அவசர அழைப்பு இலக்கம்: 119
பரீட்சைத் திணைக்களத்தின் உடனடி அழைப்பு இலக்கம்: 1911
2025 உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பாடங்கள் 2026 ஜனவரி 12 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை 2,362 பரீட்சை மையங்களில் நடைபெறவுள்ளன.
