கத்தார் இராச்சியத்தில் பணியிலிருந்த போது உயிரிழந்த இலங்கையர்களான இழப்பீட்டை அங்குள்ள இலங்கை தூதரகம் பெற்றுள்ளது.
கிடைக்கப்பெற்ற இழப்பீட்டு தொகையில் ஒரு பகுதியை தூதரக அலுவலகம் ஊடாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மிகுதி பணம் இலங்கையிலுள்ள குடும்பங்களின் உறவினர்களுக்கு கிடைக்கும் வகையில் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 172 மில்லியன் ரூபாவை இழப்பீடாக வழங்க தூதரகம் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
