காசாவில் கடைசி பணயக் கைதியின் உடல் மீட்பு: ரஃபா எல்லை விரைவில் திறக்க வாய்ப்பு

Date:

காசாவில் ஹமாஸ் அமைப்பினரின் வசம் இருந்த கடைசி இஸ்ரேல் பணயக் கைதியின் உடல் மீட்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் திங்கட்கிழமை அறிவித்தது.

இதன்மூலம், போா்நிறுத்த நடவடிக்கைகள் அடுத்த கட்டத்தை நோக்கி நகர வழி ஏற்பட்டுள்ளது.

கடந்த 2023, இஸ்ரேலில் அத்துமீறி நுழைந்து ஹமாஸ் அமைப்பினா் நடத்திய தாக்குதலில் 24 வயது காவல்துறை அதிகாரியான ரான் கிவிலி கொல்லப்பட்டாா். அவரது உடலை ஹமாஸ் படையினா் பிணையாகக் காசாவுக்கு எடுத்துச் சென்றனா்.

இந்நிலையில், வடக்கு காசாவில் உள்ள ஒரு மயானத்தில் நடத்தப்பட்ட தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு ரான் கிவிலியின் உடல் திங்கள்கிழமை கண்டெடுக்கப்பட்டது.

இதன் மூலம், பணயக்கைதிகள் அனைவரையும் தாயகம் அழைத்து வருவோம் என்ற உறுதிமொழியை நிறைவேற்றிவிட்டதாக இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு பெருமிதம் தெரிவித்துள்ளாா்.

ரான் கிவிலியின் உடல் மீட்கப்பட்டதைத் தொடா்ந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் மத்தியஸ்தத்தில் எட்டப்பட்ட போா் நிறுத்த ஒப்பந்தத்தின் அடுத்த கட்டத்தைச் செயல்படுத்த வழிவகை ஏற்பட்டுள்ளது.

அதன்படி, எகிப்து மற்றும் காசாவை இணைக்கும் ராஃபா எல்லை விரைவில் திறக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

2024-ஆம் ஆண்டு மே மாதம் முதல் முடக்கப்பட்டிருந்த இந்த எல்லைப் பாதை மீண்டும் திறக்கப்படுவது, காசா மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உதவிகள் சா்வதேச சமூகத்திடமிருந்து தடையின்றி கிடைக்க உதவும்.

காசா மறுசீரமைப்பு, சா்வதேச பாதுகாப்புப் படையை உருவாக்குதல், பலஸ்தீன நிா்வாகத்துக்கான புதிய அரசை அமைத்தல், ஹமாஸ் அமைப்பினரை ஆயுதமேந்துவதிலிருந்து தடுத்தல் போன்ற 20 அம்சத் திட்டங்கள் அடுத்தடுத்து செயல்படுத்தப்படும்.

போா்நிறுத்தம் நடைமுறைக்கு வந்த அக். 10-ஆம் திகதிக்குப் பிறகும், இதுவரை நீடித்து வந்த மோதலில் 480-க்கும் மேற்பட்ட பலஸ்தீனா்கள் கொல்லப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

போா் தொடங்கியதிலிருந்து காஸா பகுதிக்குள் செய்தி சேகரிக்கச் செல்லும் சா்வதேச பத்திரிகையாளா்களுக்கு இஸ்ரேல் விதித்துள்ள தடையை நீக்கக் கோரி, தொடரப்பட்ட வழக்கை இஸ்ரேல் உச்சநீதிமன்றம் பரிசீலித்து வருகிறது. இது குறித்த தீா்ப்பு விரைவில் வெளியாகும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

Popular

More like this
Related

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் மற்றும் பணிப்பாளர் கைது

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் சரத் கோன்கஹாகே மற்றும் முன்னாள்...

இலங்கையின் பல பகுதிகளில் சூரியன் உச்சம்

சூரியனின் வடதிசை நோக்கிய நகர்விற்கு அமைவாக, ஏப்ரல் 05 முதல் 15 ஆம்...

புதிய பொருளாதார நிவாரணத் திட்டத்தை சமர்ப்பித்தார்.

அரசாங்கத்தின் பொருளாதார நிவாரணத் தொகுப்பைச் சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க,...

குடிசன வீட்டு வசதிகள் தொகை மதிப்பு 2024 இறுதி அறிக்கை கையளிப்பு.

இலங்கையின் குடிசன வீட்டு வசதிகள் தொகை மதிப்பு 2024 தொடர்பான இறுதி...