இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கேரள மாநில துணைத் தலைவர், முன்னாள் அமைச்சர் மாண்புமிகு V.K. இப்ராஹிம் குஞ்சு காலமானார்.
முதலில் MSF மற்றும் யூத் லீகில் தன் அரசியல் பயணத்தை தொடங்கிய அவர்,
நான்கு முறை கேரள சட்டமன்ற உறுப்பினராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2011 – 2016 ஆம் ஆண்டு ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) ஆட்சியில்
பொதுப்பணித்துறை அமைச்சராக பணியாற்றியதோடு, 2005 – 2006 காலகட்டத்தில் தொழில்துறை அமைச்சராகவும் பதவியேற்றார்.
அன்னாரின் மறைவு மாநில அரசியலுக்கும் முஸ்லிம் லீக் பேரியக்கத்திற்கும் ஒரு பெரும் இழப்பாக கருதப்படுகிறது.
வல்ல இறைவன் அவர்களின் நற்செயல்களை ஏற்றுக்கொண்டு, பிழைகளை மன்னித்து, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயரிய வெகுமானத்தை வழங்குவானாக என அனைவரும் பிரார்த்திக்கின்றனர்.
