அம்பத்தலேயிலிருந்து தெஹிவளை வரை செல்லும் பிரதான நீர் விநியோகக் குழாயில் ஏற்பட்ட சடுதியான வெடிப்பு மற்றும் அதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் அவசர திருத்தப் பணிகள் காரணமாக, கொழும்பின் பல புறநகர்ப் பகுதிகளில் நீர் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, மொரட்டுவை, இரத்மலானை,கல்கிஸ்ஸ, தெஹிவளை, வெள்ளவத்தை, பாமன்கடை, சொய்சாபுர, முல்லேரியா பகுதிகளுக்கும், பத்தரமுல்ல பகுதிக்கும் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
