சீன வெளிவிவகார அமைச்சர் வொன்க் ஈ இலங்கைக்கு ஒரு நாள் விஜயமாக இன்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக நாட்டிற்கு வருகை தந்தார்.
சீனாவிற்கு சொந்தமான பீஜிங் விமான சேவையின் விசேட விமானம் ஊடாக அவர்கள் இவ்வாறு வருகை தந்தனர்.
அவர்களை வரவேற்கும் வகையில் இலங்கைக்கான சீன தூதுவர் ஷி ஷென்ஹொன்க் உள்ளிட்ட தூதரக அதிகாரிகள் விமான நிலையத்திற்கு சென்றிருந்தனர்.
